Monday, January 2, 2017

எங்கே கடவுள்?

நீல பாய் விருச்சி நீட்டி அளக்கற
ஒளிய குழம்பாக்கி வெளியில வீசுற
பூமிய சுத்தவச்சு,
சூரியன பத்தவச்சு,
நிலவ இருட்டுல கண்முழிக்க வச்சியோ!

அறிவ வெதச்சு ஆழம்பாக்குற
கொஞ்சம் ஆட்டம் காட்டிபுட்டா
அறுவடைக்க நாள் கேட்குற!

அஞ்சு முகங்காட்டி என்ன அரவணைக்க பாக்குற
பின்ன அஞ்ச ஒன்னாக்கி என்ன ஆட்டிபடைக்கிற

(பூச்சாண்டி புயலா, புன்னகைக்கும் தென்றலா
ஆழ்பறிக்கும் ஆழியா, வான் சுரக்கும் மாரியா
சுடரொளியா, சுடும் வலியா
விதை நிலமா, புதைக்குழியா
திறந்த வானா, வான்வழியா)

விண்ணுல உன்னத்தேட விண்கலம் செய்ஞ்சு தந்தாயோ
மண்ணுல நீ இருக்கேனு மலைய நட்டுவச்சயாயோ
தூண துரும்பாக்கி தூசிதட்டி பாக்குறன்
கண்ணில் பட மாட்டாயோ,
காதில் விழ மாட்டாயோ
நான் கைக்கூப்பி மட்டும் நிற்கும் கற்சிலையோ
----
விண்ணுலயும் நான் இல்ல,
மண்ணுலயும் நான் இல்ல
உன் மனசுக்குள்ளதான் நான் இருக்கேன்!

தூணுலயும் நான் இல்ல
துரும்புலயும் நான் இல்ல

தூய அன்பில் மட்டுமே நான் இருப்பேன்!  

Wednesday, December 24, 2014

Kathal Game

Orbit உன்ன சுத்தி வந்தேன்
நீ டூ விட்டு  ஏன்டி தள்ளி நின்ன?

Game start…
Love game a நானும் start பண்ண
Hard mode a ஏன்டி choose பண்ண?

First stage லேயே  நீ  fight வச்ச
என்  காதல் points எல்லாம் loss செஞ்சன்
கொஞ்சம் நீ  miss பண்ண  gapப்புலத்தான்
Spider man ஏன் web புலத்தான்,
உன்ன  lock பண்ணன்

Fruit ninja போல கையிற அறுத்துபுட்டு
Temple runner போல் ஓடுறியே
Frinds கிட்ட, Face book இல் கடன்  வாங்கி
Moto bike தான்  உன்ன தேடி வந்தேன்
Subway surfer ஓட Jetpack வாங்கி
ஏன்டி நீயும் fly பண்ண

Orbit உன்ன சுத்தி வந்தேன்
நீ டூ விட்டு  ஏன்டி தள்ளி நின்ன? 

Candy crush , ஏன் heart ,  confuse செஞ்ச
இருந்தும்,  Farm villa போல் காதல் வளத்து  நின்னேன்
உன் Zombies எல்லாம் torture செய்ய
காதல் வெறி புடிச்சு  Hulk நான் மாற
Tanker வெடி வெடிச்சி என்ன சிற புடிச்ச

Orbit உன்ன சுத்தி வந்தேன்
நீ டூ விட்டு  ஏன்டி தள்ளி நின்ன?

Mario brother   வந்து release பண்ண
1 up புடிச்சு உன்ன தேடி வந்தேன்
நீயும்  Gun வச்சு என்ன காலி  பண்ண
என் life எல்லாம் போச்சு உன்னாலே
உன் love  கொடுத்தா reset ஆவேண்டி  தன்னாலே

Game restart…

Thursday, August 23, 2012

மழை

வானத்தில் வண்ணமிட்டு,
மேகத்தில் மையமிட்டு,
இந்த மண்ணை முத்தமிட்டாய்!

Thursday, July 7, 2011

மாறுங்க

கண்களே தொடக்கமாய், 
கனவுகளோ நெருக்கமாய்!  
சொல்ல முடியாத உணர்வு,
தொல்லை செய்யும் நினைவு!

எளிதில் வசப்படும் ஆணின் மனம்,
அவனை முழுமையாய் அறிய சொல்லும் பெண்ணின் குணம்!

பொறுமையில்லாமல் புண்பட்டு,
புறகணிங்க துடிப்பான்,
பின் கண்ணீரோடு கெஞ்சுவான்!

இறங்காது அவள் மனம்,
மனதை இருக்கமாய் வைப்பதே அவள் பலம்!

முழுதாய் போராடுபவனை உதர செய்வாள்,
முன்னுக்குப்பின்  முரணானவனையே அடைய துடிப்பாள்!

புரிந்துக்கொள்ள முடியாதவள் பெண்மை,
இதில் சில ஆண்களும் இருப்பது  உண்மை!

இவர்களுக்கு எதிரி உறவுகளில்லை,
அதிலும் சில முரண்பாட்டு தொல்லை!

இந்த இடர்பாட்டுக்குள் உடைப்படும்,
காதல்கள்தான் எத்தனை?

முதலில் தோன்றும் எதுவுமே உன்னதமானது,
என்று நினைத்து கொள்வதே இதன் கோளாறு!

தேடல் எனபது வாழ்கைக்கு மட்டுமல்ல,
நல்ல  மனதிற்கும்தான்!
காதலில் உலகமில்லை,
காதலில்லாமலும் உலகமில்லை!

---கோபிஜி

Thursday, June 9, 2011

கொஞ்சம் யோசிங்க

கண்ணில் கொஞ்சம் உறக்கம்,
காரணமறியா நெருக்கம்,

கனவுகளே உணவாக,
காலங்களோ கொஞ்சம் கனமாக!

பிடித்தவை எல்லாம் கொஞ்சம் தள்ளியே,
சோர்வுகளும், சோகங்களையும் தூர போக சொல்லியே!

சொல்லமுடியாது பிரிவு
கொஞ்சம் சொல்லியே போக சொல்லும் மனது!

நினைவுகளை சுமந்து கொஞ்ச காலம்,
பின் வலிகளை!, 

(வலிகள் இல்லா வாழ்கையும் இல்லை,
வலிகள் மட்டுமே வாழ்கையும் இல்லை)
  --- கோபி (ஜி)

Wednesday, September 8, 2010

மனமே!

மனமே எனக்குள் கட்டுபடு!


என் தோழமைக்கு கொஞ்சம் தோள்கொடு!

கவலைக்களுக்கு விடைகொடு, கனவுகளுக்கு உயிர்கொடு!