Friday, August 10, 2018

காதல்

நாணல்ல நீ,
தென்றல் தீண்டையிலே!
சிறு நாணமில்லை
உன் விழியில்,
முதற்பார்வையிலே
காதலுமில்லை காமமுமில்லை!

சுற்றித்திரியும் பட்டுப்பூச்சியின்
வண்ணச்சிறகினிலே,
அதன் இழைக்கொண்டே
சிறு திரைக்கட்டி
மறைத்தனரே!
கூட்டிலுள்ள்ப் புழுப்போல அது நடித்து
என் முன் நின்றாலும்
தனை மறந்து சிறக்கொடித்து
பறந்து சென்றதே; நான் நகைக்க!

சிதறும் சில்லறையாய்
முதற்குரலிலே,
காதல் திரியை
முழுதாய் பற்றச் செய்தவளே!
காற்றின் முதுகிலே
பல கவிதை நிரப்பியே,
என் மூச்சு முழ்கச்செய்தாலே
காதல் மழையாய் பொழிந்தாலே!

உறவினர் சூழ ஓர் ஊர்வலமாம்
சிறு முயல்போல் அவர் முன்னே,
கருவண்டு விழிக்கொண்டு 
ஆங்காங்கே சுற்றித்திரிந்தனவாம்!
நா உரித்த அஞ்சுகமாய்
சொல்லுதிர்த்து, துள்ளிச்சென்றது
புள்ளி மான்போலே!
உற்றுநோக்க முடியவில்லை,
உற்றார் அருகினிலிருக்கையிலே
இருந்தும் இன்பம் தந்துசென்றாள்
விழியின் சிறு அசைவினிலே!
அவள் முகம் மதியல்ல,
என் மதிக்கொள்ளும் முகமது!
வேல்விழி அவளல்ல,
வெறும் விழியே எனைக்கொல்ல!
மொழியொன்றும் அமுதல்ல,
அவள் அன்பிற்கு அது நிகரல்ல!

இறைக்கைக் கட்டியே
வானில் பறக்க்ச்செய்தேனே,
முகம் காணவே!
பின் அமர்ந்து, இருக்கப்பற்றியே
சிறு பிம்பம் கொண்டு
உனைக் காண செய்தவளே!
பக்க்ம் வந்தாள் எட்டி சென்றாள்
சுற்றம் பார்த்தே, முகம் ஒட்டியே
எனைக் கட்டிக்கொண்டாள்!

காதல் கோயிலில்
கரம்பற்றியே சுற்றித்திரிந்தோமே!
ஏனோ அவள் விழிக்காணயிலே
காமகண் திறந்தவளே!
மூங்கில் காட்டுக்குள்
கண்முடும் விளையாட்டு!
நிலவின் மடியிலே
கடல் அலைப்போல,
கொம்பை சுற்றிய கொடிப்போல,
கோவை கொத்தும் கிளப்போல,
காதலும் காமமும் கைக்கோர்த்த
விளையாட்டு!

வெள்ளைத்தாளிலே தவறி
சிந்திய சிறு மையென்றே,
கண் பிழைக் கொண்டே 
தவறி அழித்து விட்டேன்
என் முதல் கவியை,
மன்னிப்பாயா?

முழுக்கவியே!


இனி தேவை நீயே
என் காதல் தேவதையே...

No comments:

Post a Comment