காதலால் கைப்பிடித்தேன்
கவிதையாய் வடிவெடுத்தாய்,
கன்னி கரம்விடுக்க
பற்றினேன் நின்னையே,
மீண்டும் காதலா?
நீண்டுக்கொண்டு போனாலும்
நீ திகட்டவில்லை....
Friday, August 10, 2018
அயன்
காற்றுக்கு கால் முளைத்து
காலிடறி புல் தடுங்கி விழந்து
பின் மூன்று காலால் முந்திக்கொண்டு ஓடி
நூல் பிடித்து ஊசியின் வாலில் பறந்து
வண்ணவனின் வானவில் மெத்தையில் குதித்து
மெல்லிய மிதியில் நடந்து
கூடிய இதழில் குடி புகுந்து கண் உறங்கயிலே
கனாவிலே அச்சுண்டு
கருமையிலே பின் விழிந்து
இருள் நீங்க ஒளி ஏந்தி வந்த தோழமைக்கு தோள் இசைந்து
விடியலுக்கு காத்திருந்து
அரைக்கூவலில் அலுப்பை நீக்கி
விண்ணின் துளியில் உடல் ஈரமாக
தீயின் புதல்வனின் தீண்டலில் நீர் உலர்ந்தி
பறந்த இலவும் உடுத்தி
நறுமனத்தை நாசியுண்டு
பின் நானிறக்க தூனைப் பற்றி
பச்சைப் படுக்கையிலே தரையிறங்கி
மச்சம் துள்ளக்கண்டு
நாவிலே எச்சம் கொண்டவனின் நட்பை நாடி
கறை சேர்ந்து ஊர் போனேன் நீள வண்டியின் படுக்கையிலே
காலிடறி புல் தடுங்கி விழந்து
பின் மூன்று காலால் முந்திக்கொண்டு ஓடி
நூல் பிடித்து ஊசியின் வாலில் பறந்து
வண்ணவனின் வானவில் மெத்தையில் குதித்து
மெல்லிய மிதியில் நடந்து
கூடிய இதழில் குடி புகுந்து கண் உறங்கயிலே
கனாவிலே அச்சுண்டு
கருமையிலே பின் விழிந்து
இருள் நீங்க ஒளி ஏந்தி வந்த தோழமைக்கு தோள் இசைந்து
விடியலுக்கு காத்திருந்து
அரைக்கூவலில் அலுப்பை நீக்கி
விண்ணின் துளியில் உடல் ஈரமாக
தீயின் புதல்வனின் தீண்டலில் நீர் உலர்ந்தி
பறந்த இலவும் உடுத்தி
நறுமனத்தை நாசியுண்டு
பின் நானிறக்க தூனைப் பற்றி
பச்சைப் படுக்கையிலே தரையிறங்கி
மச்சம் துள்ளக்கண்டு
நாவிலே எச்சம் கொண்டவனின் நட்பை நாடி
கறை சேர்ந்து ஊர் போனேன் நீள வண்டியின் படுக்கையிலே
Monday, January 2, 2017
எங்கே கடவுள்?
நீல பாய் விருச்சி நீட்டி
அளக்கற
ஒளிய குழம்பாக்கி வெளியில வீசுற
பூமிய சுத்தவச்சு,
சூரியன பத்தவச்சு,
நிலவ இருட்டுல கண்முழிக்க
வச்சியோ!
அறிவ வெதச்சு ஆழம்பாக்குற
கொஞ்சம் ஆட்டம் காட்டிபுட்டா
அறுவடைக்க
நாள் கேட்குற!
அஞ்சு முகங்காட்டி
என்ன அரவணைக்க பாக்குற
பின்ன அஞ்ச ஒன்னாக்கி
என்ன ஆட்டிபடைக்கிற
(பூச்சாண்டி
புயலா, புன்னகைக்கும் தென்றலா
ஆழ்பறிக்கும்
ஆழியா, வான் சுரக்கும் மாரியா
சுடரொளியா, சுடும்
வலியா
விதை நிலமா, புதைக்குழியா
திறந்த வானா, வான்வழியா)
விண்ணுல உன்னத்தேட
விண்கலம் செய்ஞ்சு தந்தாயோ
மண்ணுல நீ இருக்கேனு
மலைய நட்டுவச்சயாயோ
தூண துரும்பாக்கி
தூசிதட்டி பாக்குறன்
கண்ணில் பட மாட்டாயோ,
காதில் விழ மாட்டாயோ
நான் கைக்கூப்பி
மட்டும் நிற்கும் கற்சிலையோ
----
விண்ணுலயும் நான்
இல்ல,
மண்ணுலயும் நான்
இல்ல
உன் மனசுக்குள்ளதான்
நான் இருக்கேன்!
தூணுலயும் நான் இல்ல
துரும்புலயும் நான்
இல்ல
தூய அன்பில் மட்டுமே
நான் இருப்பேன்!
Wednesday, December 24, 2014
Kathal Game
Orbit ஆ
உன்ன சுத்தி வந்தேன்
நீ டூ விட்டு ஏன்டி தள்ளி நின்ன?
Game start…
Love game a நானும்
start பண்ண
Hard mode a ஏன்டி
choose பண்ண?
First stage லேயே நீ fight வச்ச
என் காதல்
points எல்லாம் loss செஞ்சன்
கொஞ்சம்
நீ miss பண்ண
gapப்புலத்தான்
Spider man ஆ
ஏன் web புலத்தான்,
உன்ன lock பண்ணன்
Fruit ninja போல
கையிற அறுத்துபுட்டு
Temple runner போல்
ஓடுறியே
Frinds கிட்ட,
Face book இல் கடன் வாங்கி
Moto bike ல
தான் உன்ன
தேடி வந்தேன்
Subway surfer ஓட
Jetpackஅ வாங்கி
ஏன்டி நீயும் fly பண்ண
Orbit ஆ
உன்ன சுத்தி வந்தேன்
நீ டூ விட்டு ஏன்டி தள்ளி நின்ன?
Candy crush ஆ,
ஏன் heart அ, confuse செஞ்ச
இருந்தும், Farm villa போல்
காதல் வளத்து நின்னேன்
உன்
Zombies எல்லாம் torture செய்ய
காதல் வெறி புடிச்சு Hulk
அ நான் மாற
Tanker வெடி
வெடிச்சி என்ன சிற புடிச்ச
Orbit ஆ
உன்ன சுத்தி வந்தேன்
நீ டூ விட்டு ஏன்டி தள்ளி நின்ன?
Mario brother உ வந்து
release பண்ண
1 up அ
புடிச்சு உன்ன தேடி வந்தேன்
நீயும் Gun வச்சு
என்ன காலி பண்ண
என்
life எல்லாம் போச்சு உன்னாலே
உன்
love கொடுத்தா
reset ஆவேண்டி தன்னாலே
Game restart…
Thursday, August 23, 2012
Thursday, July 7, 2011
மாறுங்க
கண்களே தொடக்கமாய்,
கனவுகளோ நெருக்கமாய்!
சொல்ல முடியாத உணர்வு,
தொல்லை செய்யும் நினைவு!
எளிதில் வசப்படும் ஆணின் மனம்,
அவனை முழுமையாய் அறிய சொல்லும் பெண்ணின் குணம்!
பொறுமையில்லாமல் புண்பட்டு,
புறகணிங்க துடிப்பான்,
பின் கண்ணீரோடு கெஞ்சுவான்!
இறங்காது அவள் மனம்,
மனதை இருக்கமாய் வைப்பதே அவள் பலம்!
முழுதாய் போராடுபவனை உதர செய்வாள்,
முன்னுக்குப்பின் முரணானவனையே அடைய துடிப்பாள்!
புரிந்துக்கொள்ள முடியாதவள் பெண்மை,
இதில் சில ஆண்களும் இருப்பது உண்மை!
இவர்களுக்கு எதிரி உறவுகளில்லை,
அதிலும் சில முரண்பாட்டு தொல்லை!
இந்த இடர்பாட்டுக்குள் உடைப்படும்,
காதல்கள்தான் எத்தனை?
முதலில் தோன்றும் எதுவுமே உன்னதமானது,
என்று நினைத்து கொள்வதே இதன் கோளாறு!
தேடல் எனபது வாழ்கைக்கு மட்டுமல்ல,
நல்ல மனதிற்கும்தான்!
காதலில் உலகமில்லை,
காதலில்லாமலும் உலகமில்லை!
---கோபிஜி
Thursday, June 9, 2011
கொஞ்சம் யோசிங்க
கண்ணில் கொஞ்சம் உறக்கம்,
காரணமறியா நெருக்கம்,
கனவுகளே உணவாக,
காலங்களோ கொஞ்சம் கனமாக!
பிடித்தவை எல்லாம் கொஞ்சம் தள்ளியே,
சோர்வுகளும், சோகங்களையும் தூர போக சொல்லியே!
சொல்லமுடியாது பிரிவு
கொஞ்சம் சொல்லியே போக சொல்லும் மனது!
நினைவுகளை சுமந்து கொஞ்ச காலம்,
பின் வலிகளை!,
(வலிகள் இல்லா வாழ்கையும் இல்லை,
வலிகள் மட்டுமே வாழ்கையும் இல்லை)
--- கோபி (ஜி)
Subscribe to:
Posts (Atom)