Friday, August 10, 2018

ஆதாம் ஏவாள்


கனி ஒன்றால் கல்லடி பட்ட இதயமிரண்டு
காதல் செய்ய கற்று கொண்டதது
ஏடன் தோட்டத்தில்!

படைத்தவன் அவனே விதிமிரலை நினைவூட்டி
அவர்கள் காதலுக்கு வித்திட்டான்!

உடலோ உடைத்தேட
உணர்வோ உள்தேட
விரல்களே விடை அறிந்தது

உணர்வோ உயிர்பெற்றது
உயிரோ உருபெற்றது
உலகம் மொழிக் கற்றது

பயம் பக்தியானது
பழக்கம் பாரம்பரியமானது

அறிவோ அனுபவம் பெற்றது
அறிவியலோ ஆராய கற்றது

விடையறியா கேள்விக்கு
கடவுள் என்ற மருவிடை மேலிடபட்டது.

காதல்

நாணல்ல நீ,
தென்றல் தீண்டையிலே!
சிறு நாணமில்லை
உன் விழியில்,
முதற்பார்வையிலே
காதலுமில்லை காமமுமில்லை!

சுற்றித்திரியும் பட்டுப்பூச்சியின்
வண்ணச்சிறகினிலே,
அதன் இழைக்கொண்டே
சிறு திரைக்கட்டி
மறைத்தனரே!
கூட்டிலுள்ள்ப் புழுப்போல அது நடித்து
என் முன் நின்றாலும்
தனை மறந்து சிறக்கொடித்து
பறந்து சென்றதே; நான் நகைக்க!

சிதறும் சில்லறையாய்
முதற்குரலிலே,
காதல் திரியை
முழுதாய் பற்றச் செய்தவளே!
காற்றின் முதுகிலே
பல கவிதை நிரப்பியே,
என் மூச்சு முழ்கச்செய்தாலே
காதல் மழையாய் பொழிந்தாலே!

உறவினர் சூழ ஓர் ஊர்வலமாம்
சிறு முயல்போல் அவர் முன்னே,
கருவண்டு விழிக்கொண்டு 
ஆங்காங்கே சுற்றித்திரிந்தனவாம்!
நா உரித்த அஞ்சுகமாய்
சொல்லுதிர்த்து, துள்ளிச்சென்றது
புள்ளி மான்போலே!
உற்றுநோக்க முடியவில்லை,
உற்றார் அருகினிலிருக்கையிலே
இருந்தும் இன்பம் தந்துசென்றாள்
விழியின் சிறு அசைவினிலே!
அவள் முகம் மதியல்ல,
என் மதிக்கொள்ளும் முகமது!
வேல்விழி அவளல்ல,
வெறும் விழியே எனைக்கொல்ல!
மொழியொன்றும் அமுதல்ல,
அவள் அன்பிற்கு அது நிகரல்ல!

இறைக்கைக் கட்டியே
வானில் பறக்க்ச்செய்தேனே,
முகம் காணவே!
பின் அமர்ந்து, இருக்கப்பற்றியே
சிறு பிம்பம் கொண்டு
உனைக் காண செய்தவளே!
பக்க்ம் வந்தாள் எட்டி சென்றாள்
சுற்றம் பார்த்தே, முகம் ஒட்டியே
எனைக் கட்டிக்கொண்டாள்!

காதல் கோயிலில்
கரம்பற்றியே சுற்றித்திரிந்தோமே!
ஏனோ அவள் விழிக்காணயிலே
காமகண் திறந்தவளே!
மூங்கில் காட்டுக்குள்
கண்முடும் விளையாட்டு!
நிலவின் மடியிலே
கடல் அலைப்போல,
கொம்பை சுற்றிய கொடிப்போல,
கோவை கொத்தும் கிளப்போல,
காதலும் காமமும் கைக்கோர்த்த
விளையாட்டு!

வெள்ளைத்தாளிலே தவறி
சிந்திய சிறு மையென்றே,
கண் பிழைக் கொண்டே 
தவறி அழித்து விட்டேன்
என் முதல் கவியை,
மன்னிப்பாயா?

முழுக்கவியே!


இனி தேவை நீயே
என் காதல் தேவதையே...

எழுதுக்கோல்

காதலால் கைப்பிடித்தேன்
கவிதையாய் வடிவெடுத்தாய்,
கன்னி கரம்விடுக்க 
பற்றினேன் நின்னையே,
மீண்டும் காதலா?
நீண்டுக்கொண்டு போனாலும்
நீ திகட்டவில்லை....

அயன்

காற்றுக்கு கால் முளைத்து
 காலிடறி புல் தடுங்கி விழந்து
பின் மூன்று காலால் முந்திக்கொண்டு ஓடி
நூல் பிடித்து ஊசியின் வாலில் பறந்து
வண்ணவனின் வானவில் மெத்தையில் குதித்து
மெல்லிய மிதியில் நடந்து
கூடிய இதழில் குடி புகுந்து கண் உறங்கயிலே
கனாவிலே அச்சுண்டு
கருமையிலே பின் விழிந்து 
இருள் நீங்க ஒளி ஏந்தி வந்த தோழமைக்கு தோள் இசைந்து 
விடியலுக்கு காத்திருந்து
அரைக்கூவலில் அலுப்பை நீக்கி
விண்ணின் துளியில் உடல் ஈரமாக
தீயின் புதல்வனின் தீண்டலில் நீர் உலர்ந்தி
பறந்த இலவும் உடுத்தி
நறுமனத்தை நாசியுண்டு
பின் நானிறக்க தூனைப் பற்றி
பச்சைப் படுக்கையிலே தரையிறங்கி
மச்சம் துள்ளக்கண்டு
நாவிலே எச்சம் கொண்டவனின் நட்பை நாடி
கறை சேர்ந்து ஊர் போனேன் நீள வண்டியின் படுக்கையிலே